கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

Author: Udhayakumar Raman
2 September 2021, 10:35 pm
Quick Share

கோவை: நீலம்பூர் அருகே கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள எல்என்டி டோல் கேட் அருகில் இன்று வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் கேரளா வாகன எண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. உடனடியாக அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் வாகனத்தை சோதனையிட்டனர். சோதனையிட்டதில் சட்டத்திற்குப் புறம்பான குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை காரில் கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா, அசோக் பிரஜா பால் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது. மேலும் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் காரில் பதுக்கி வைத்து கொண்டு வந்த 200 கிலோ குட்கா மற்றும் ஓட்டிவந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Views: - 173

0

0