நாகமரை பரிசல் துறையில் அனுமதியின்றி இயக்கிய 4 பரிசல்கள் பறிமுதல்

5 August 2020, 1:40 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள நாகமரை பரிசல் துறையில் அனுமதியின்றி இயக்கிய 4 பரிசல்களை பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம் பறிமுதல் செய்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அருகே உள்ள ஏரியூர் அடுத்த நாகமரை ஒட்டனூர்-கோட்டையூர் பரிசல் துறையில், அனுமதி இன்றியும், கொரோனா பரப்பும் விதமாகவும் தொடர்ந்து பரிசல் இயக்கப்பட்டு வந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்த நிலையில், பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம் சம்பவ இடத்திற்கு சென்று,

கோட்டையூரில் இருந்து நாகமரைக்கு அனுமதியின்றி பரிசல் இயக்கிய 4 பரிசல்களை பறிமுதல் செய்தார். மேலும் பரிசல் இயக்கிய பரிசல் ஓட்டி மீது, ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதி இன்றி பரிசல் இயக்கிய பெரியசாமி, குப்பன், ரங்கு ஆகியோரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 10

0

0