இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

3 November 2020, 3:36 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கிய போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்ற காவல்துறையினர் சிப்காட் தொழிற்பேட்டை அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த விஜய், ராஜேஷ் என்பதும், இவர்கள் விஜயவாடாவில் இருந்து சென்னை போரூருக்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த சிப்காட் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 13

0

0