பதுக்கி வைக்கபட்ட 8 டன் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் பறிமுதல்: கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் டிராக்டர்கள் பறிமுதல்…

Author: Udhayakumar Raman
31 August 2021, 4:44 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய பதுக்கி வைக்கபட்ட 8 டன் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை தனி வட்டாட்சியர் இளங்கோவன் பறிமுதல் செய்தார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் இரண்டு டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதித்த நிலையில் குறைந்தளவு அறுவடை செய்யப்பட்டதை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு நெல் விளைச்சல் இல்லாததால் நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாநில,வெளிமாவட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சீர்காழி பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் கூடுதல் லாபத்திற்கு விற்று லாபமடைந்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு மழையால் பாதித்த பயிர்களுக்கு காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வந்த நிலையில்,

வெளி மாநில நெல் மூட்டகளை கொள்முதல் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்ட நிலையில் மறைமுகமாக கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் சீர்காழியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடலூரில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகணி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஏற்றி வந்த லாரி , 2 டிராக்டர்கள் 8 டன் நெல் மூட்டையுடன் சீர்காழி தாடாளன்கோவில் பழைய அரவைமில்லில் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து 8 டன் நெல் லாரி, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த சீர்காழி குடிமை பொருள் தனி வட்டாட்சியர் இளங்கோவன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 139

0

0