ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது

By: Udayaraman
14 October 2020, 11:14 pm
Quick Share

தூத்துக்குடி: கோவில்பட்டி பண்ணை தோட்ட தெருவில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அரசினால் தடைசெய்யப்பட்ட 1,230 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பண்ணைத்தோட்டத் தெருவில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில், போலீஸார் பண்ணைத் தோட்டத் தெருவில் உள்ள ஒரு கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடை அருகேயுள்ள மற்றொரு கட்டடத்தில் உள்ள அறையை திறந்து பார்த்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 1,230 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி ஜோதி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் பாலமாரிராஜை(36) கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பற்றி மதிப்பு சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 43

0

0