சாலையில் நின்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: பணம் பறித்த வாலிபர்கள் கைது!

By: Udayaraman
7 October 2020, 11:12 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே ஆட்டோ ஏறுவதற்காக சாலையில் நின்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ( 26 ). இவர் பிராட்வேயில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். பிராட்வே செல்வதற்காக கன்னிகாபுரம் பகுதியில் ஆட்டோ ஏறுவதற்காக சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி , அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர். இது குறித்து பிரகாஷ் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கன்னிகாபுரம் டிராக் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக பதுங்கியிருந்த வினோத், விக்கி (எ) விக்னேஷ், மணியரசன், சஞ்சய், மனோ, வெற்றி, செல்வம் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 31

0

0