சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு
21 September 2020, 10:21 pmகோவை: மலுமிச்சம்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய போது கஞ்சா போதையில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் அவருடைய தம்பி முகேஷ் இருவரும் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசு மற்றும் தடுக்க வந்த ரமேஷ் ஆகிய இருவரையும் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினர் எதிர் தரப்பினர் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். உடனே அங்கு வந்த செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரித்தனர்.
இதுகுறித்து அப்பகுதிபொதுமக்கள் கூறுகையில், இந்த குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ரவுடிகளின் கூடாரமாக மாறியுள்ளது என்றும், கஞ்சா விற்பனை மற்றும் மது விற்பனை தாராளமாக நடைபெற்றுக் கொண்டுள்ளதும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் மது போதையில் மற்றும் கஞ்சா போதையில் அடிக்கடி இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.