ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் பக்தர்கள் அனுமதி

19 September 2020, 4:18 pm
Quick Share

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளான இன்று ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரனா தொற்று பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி சில தளர்வுகளுடன் ஆலயங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர், கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு அனுமதித்த வந்தனர்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பது விஷேசமான தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் வருவது அதிகரிக்கும். இந்த வருடம் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில்பதிவு செய்ய வேண்டும் என கோவிலின் இணை ஆனையர் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டார்.

அதன்படி இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் காலை முதலே ஆன்லைனில் பதிவு பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் பதிவு செய்யாத பக்தர்கள் வந்த நிலையில் அவர்களை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைத்து பின்னர் , உள்ளே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உள்ளே செல்லும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் உடனடியாக வெளியேற வேண்டுமென பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.