பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

8 November 2020, 3:46 pm
Quick Share

ஈரோடு: மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துகள் தெரிவிக்கலாம் என்றும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் சின்னநாயக்கன்புதூர் மற்றும் வெள்ளாங்கோயில் ஆகிய பகுதிகளில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் மற்றும் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்கத் தொகைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் 2505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் பெற்றோர்களின் பாதுகாப்புடன் நடைபெறும்.

நூலகங்களில் நேரம் நீடிப்பு செய்ய முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளிகளிலிருந்து அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வரவில்லை எங்கள் கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துகள் தெரிவிக்கலாம். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். தொழிற்கல்விகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் திறப்பிற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டாத பட்சத்தில் பள்ளிக்கள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு தன்னால் தற்போது இதற்கு பதிலளிக்கமுடியாது இதற்கு விடை தரவேண்டியவர் முதல்வர் தான். பள்ளிகள் திறக்கப்படாத பட்சத்தில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என பதிலளித்துள்ளார். இவ்விழாக்களில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், தியாகராஜு, கழக நிர்வாகிகள் தம்பிசுப்பிரமணியம், ஆவின் தலைவர் காளியப்பன், சிறுவலூர் மனோகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 16

0

0