சூலூரில் அதிமுக சார்பிலான முதலாம் ஆண்டு கால்பந்து தொடரின் இறுதி போட்டி!!

By: Babu
6 October 2020, 8:05 pm
sulur admk - updatenews360
Quick Share

கோவை : அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் நடத்தப்பட்டு வரும் முதலாம் ஆண்டு கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நாளை சூலூரில் நடக்கிறது.

அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் FALCONS அணியினர் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு கால்பந்து போட்டியை நடத்தி வருகின்றனர். காடாம்பாடி ஊராட்சியில் ரெயின்போ அவென்யூ (செங்கதுறை செல்லும் வழியில்) அருகே இந்தப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு ஆட்டங்களின் முடிவிற்கு பிறகு இந்தத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் முடிந்தவுடன் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் VP. கந்தசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாடி பகுதி இளைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ விபி கந்தசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Views: - 44

0

0