மாசிமக திருவிழாவை முன்னிட்டு தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்

27 February 2021, 2:21 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு வைத்திகுப்பம் கடற்கரையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாசிமகத்தையொட்டி புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடைபெற்றது, இதில் துணைநிலை தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி மகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள்,

புதுவை மணக்குள விநாயகர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 50க்கும் உற்சவ மூர்த்திகள் பங்கேற்றுள்ளனர். மேலும் தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் 30 சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாசிமகத்தையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 5

0

0