தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

2 February 2021, 6:21 pm
Quick Share

வேலூர்: சத்துணவு அங்கன் வாடி, மற்றும் ஊராட்சி தொழிலாளர்களுக்கு முறையான தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுப்பட்டனர்.

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் சரவணராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் 2019 ஆம் ஜாக்டோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு ரத்து செய்தது இருப்பினும் அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்தி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும்

உடனடியாக காலிபணியிடங்களை நிரப்ப கோரியும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தொகுதிப்பூதியம் மதிப்பூதியம் மற்றும் காலமுறை ஊதியம் ஆகியவைகளை முறையாக வழங்க கோரி கோஷங்களை எழுப்பி திரளான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 17

0

0