ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த ஆசிரியர்கள்: பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு

Author: kavin kumar
13 August 2021, 7:57 pm
Quick Share

திண்டுக்கல்: ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோசஸ். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து 25 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏல சீட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாரகள். மேலும் மோசஸ் தனது‌ தம்பி தர்மர் தான் ஏலச்சீட்டு நடத்தியதாகவும், அவருடைய வீட்டை விற்று அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் வீடு விற்கப்பட்டும் ஏலச்சீட்டு உறுப்பினர்களுக்கு பணம் தராமல் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் பண மோசடி செய்துள்ளார். இது குறித்து ஏற்கனவே தாலுகா காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி குறித்து மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவோம். குடும்பத்துடன் தீக்குளிப்போம் என தெரிவித்துள்ளனர்.

Views: - 180

0

0