7.5 சதவீத ஒதுக்கீடு பெற்று தந்ததற்கு தமிழக அரசிற்கு நன்றி: ஈரோட்டில் பேனர் வைத்த பள்ளி

1 November 2020, 5:33 pm
Quick Share

ஈரோடு: தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத ஒதுக்கீடு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகள் அதிகளவு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தமிழக அரசு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீத ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்பில் சேர்வது அதிகரித்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சவீதா அருகே செயல்பட்டு வரும் பள்ளியின் சார்பில் இட ஒதுக்கீடு பெற்று தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஒதுக்கீட்டில் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0