கடலில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரின் உடல் கரை ஒதுங்கியது

19 April 2021, 2:32 pm
Quick Share

கன்னியாகுமரி: மணக்குடியில் கடலில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

நேற்று முன்தினம் 18-ஆம் தேதி நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தர்சிங் (17), சுதன்(17), சுரேஷ் குமார்(17), விஷ்வ குமார்(18), நடராஜன்(17), மணிகண்டன் (18) ஆகிய மாணவர்கள் கன்னியாகுமரியையை அடுத்த மணக்குடியில் உள்ள கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஆக்ரோஷமாக வந்த அலை மணிகண்டனை இழுத்துச் சென்றது. உடனடியாக அருகில் குளித்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தனர். ஆனால் கடல் அலை வேகமாக அவரை இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், நம்பியார், சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவரை தேடினர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் அவரது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அவளது உடலை மீட்ட போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் கூறு ஆய்விற்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலில் மூழ்கி மாயமான மாணவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் வீரபத்திரன் என்பவருடைய மகன் மணிகண்டன் (18) என்பது தெரியவந்துள்ளது. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

Views: - 11

0

0