கனமழை: கோவை லங்கா கார்னர் ரயில்வே பாலத்தில் மழை வெள்ளத்தில் பேருந்து சிக்கியது..!

Author: Udhayakumar Raman
4 December 2021, 8:44 pm
Quick Share

கோவை: கோவையில் இன்று கனமழை பெய்த நிலையில், கோவை லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியது இதில் தனியார் பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.கோவையில் ரயில் நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம் ,வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.அனைத்து சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி மேம்பாலம், கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலங்களின் கீழ் பகுதியிலும் மழை நீர் அதிக அளவு தேங்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. பல பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் கீழ் பகுதியில் தேங்கிய மழை நீரில் கார் ஒன்று சிக்கியது, இதே போல் லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மழை நீருக்குள் சிக்கிக் கொண்டது.இந்த வாகனங்களை மீட்பதற்காக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

Views: - 76

0

0