கிரேன் அறுந்து விழுந்து வட மாநில ஒப்பந்த தொழிலாளி பலி

23 February 2021, 4:13 pm
Quick Share

செங்கல்பட்டு: இரும்பு தொழிற்சாலையில் கிரேன் அறுந்து விழுந்து வட மாநிலத்தைச் சார்ந்த ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் எல்லைக்குட்பட்ட குமாரவாடி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பீ.கே என்ற இரும்பு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சபாரிவார் (32) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணியில் இருந்த போது முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கிரேன் உடைந்து சபாரிவார் மீது விழுந்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்நிறுவனத்தில் முறையான தலைக் கவசம், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படாததால் இதுபோன்ற தொடர் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் அரசு அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது இது போன்ற நிறுவனங்களை மேற்பார்வையிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த படாளம் காவல்துறையினர் சபாரிவார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 21

0

0