சசிகலாவின் வருகையால் அதிமுகவில் தற்போது பிரச்சினை: காடேஸ்வரா சுப்ரமணி பேட்டி

30 September 2020, 9:26 pm
Quick Share

திண்டுக்கல்: ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இதுவரை ஒற்றுமையாக இருந்ததே இலாப நோக்கத்தில்தான் என்றும், சசிகலா வருகை காரணமாகவே இப்போது அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிதெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்துமுன்னனி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி சாமிதரிசனம் செய்யவந்தார். அப்போது அவர் கூறியதாவது :- இந்துமுன்னனி நிறுவனத்தலைவர் ராம.கோபாலன் உடல்நலம் பெற்று திரும்பவேண்டும் என்று வேண்டி பழனிமுருகனை சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இதுவரை ஒற்றுமையாக இருந்ததே இலாப நோக்கத்தில்தான் என்றும், சசிகலா வருகை காரணமாகவே இப்போது அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும், 7ம்தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் தறுதலை என்று விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், யாராக இருந்தாலும் மனசாட்சியுடன் நாகரிகமாகவும் மரியாதையாகவும் பேச கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அதேபோல வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டரை அநாகரிகமாக ஆ.ராசா பேசியதும் கண்டனத்திற்கு உரியது. இவர்கள் அனைவரும் தீப்பொறி, ஆறுமுகத்தின் வழிவந்தவர்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்கள் பேசுவதாதவும், இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி விமர்சனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்தபோது மதுரை கோட்டப் பொறுப்பாளர் பாலன், இந்து முன்னனி மாவட்ட பொறுப்பாளர் அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.