மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

17 July 2021, 1:28 pm
Quick Share

அரியலூர்: அரியலூரில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் நகரில் இந்துசமய அறநிலை துறைக்கு சொந்தமான 60 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இன்று தொடங்கி வைத்தனர். அதன்படி தேக்கு, இலுப்பை, நாவல், புங்கன், வேம்பு, ஆலம், அத்தி உள்ளிட்ட 30 வகையான மரக்கன்றுகளும், மஞ்சள்அரளி, செம்பருத்தி, குண்டுமல்லி, செண்பகம் உள்ளிட்ட 10 வகையான பூச்செடிகளும் என 7590 கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புகல் வெட்டி எடுத்து காலாவதியான ஆயிரம் ஏக்கர் சுரங்க நிலங்களிலும் இதுபோன்று மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடபட்ட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் லால்குடி கோட்டாச்சியர் வைத்தியநாதன் மற்றும் இந்து சமய அறநிலையதுறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 85

1

0