முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்றவர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

17 November 2020, 10:27 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்றவர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆயற்பாடியை சேர்ந்தவர் செல்வம். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக வாணியம்பாடி நியூட்டன் பகுதிக்கு சென்று அங்கு பணிகளை முடித்துக்கொண்டு பின்னர் வீட்டிற்கு தன்னுடைய இரு சக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தபோது,

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழி சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி இருசக்கர வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த முந்தி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி லாரியின் பின் சகக்கரதில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுரை பொதுமக்கள் தாக்க முயன்ற போது அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். சம்பவம் அறிந்த வாணியம்பாடி நகர போலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.