உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்ட தற்கு கடந்த காங்கிரஸ் திமுக ஆட்சியில் செய்த தவறுகளே காரணம்:அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

Author: kavin kumar
7 October 2021, 3:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்ட தற்கு கடந்த காங்கிரஸ் திமுக ஆட்சியில் செய்த தவறுகளே காரணம் என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவர்க்கு யார் தடையாக இருந்தாலும் அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உப்பளம் பகுதில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், தமிழகத்தில் இன்று வரை பிற்படுத்த பட்டவர்களுக்கு இதுவரை இட ஒதுக்கீடு வழங்காத நிலையில், புதுச்சேரியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு நிறுத்த வேண்டும் என்பதற்காக பிற்படுத்தபட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் தேர்தலை நடத்த கூடாது என்பது கண்டிக்கத்தக்கது என்றும், தற்போது உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதற்கு கரணம் கடந்த காங்கிரஸ் திமுக ஆட்சியின் பொது வார்டு சீரமைப்பு மற்றும் வேறு மாநிலத்தை சேர்த்தவரை தேர்தல் ஆணையராக நியமித்தது தான் காரணம் என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த கட்சி தடையாக இருந்தாலும், அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Views: - 224

0

0