பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டுவர திருமாவளவன் வலியுறுத்தல்…

Author: kavin kumar
21 August 2021, 5:29 pm
Quick Share

திருச்சி: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை தொடர்ந்து பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- திமுக தலைமையிலான அரசு சமூக நீதிக்கான அரசு, பெரியார் கண்ட கனவை அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய வரலாற்றில் இது மாபெரும் சமூம புரட்சி.இந்தியாவிற்கே இது வழிகாட்டும் நிகழ்வு. இதை பலர் எதிர்க்கின்றார்கள் இந்துக்களை தான் நியமிக்கின்றனர். ஆனால் இதற்கு பலர் கூக்குறல் இடுகிறார்கள். நீதிமன்றம் செல்வோம் என அச்சுறுத்துகிறார்கள் – ஆனால் தி.மு.க தலைவர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என கூறி உள்ளார்.

நேற்று 21 கட்சிகளை சேர்ந்தவர்கள் சோனியா காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோம் – விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெக்காசாஸ் பிரச்சினை குறித்து முன் வைத்தோம்( Zoom இணைப்பு கலந்துரையாடல் நிகழ்வில் நேற்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்).தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய முற்றுமை தான் முக்கியமே தவிர அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய கட்டாயம் இல்லை. CAA,உபா குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

CAA,உபா குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வன்கொடுமைகள் தடுப்பு கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது. ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டிய கூட்டம் கூட்டப்படாமல் தற்போது கூட்டப்பட்டு உள்ளது. சமூக நீதி சமூகங்களை ஒன்றினைக்க விடாமல் மோடி அரசு தடுக்கிறது. schedule caste என்கிற அடிப்படையில் அணி திறள கூடாது என பாராதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. மக்கள் சமூக நீதி பேரவை என்கிற அமைப்பு திருச்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து வருகிறது.

இன்று அவர்கள் எனக்கு விருது வழங்க உள்ளனர். 25 சாதிகளின் பெயர்கள் ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை.இதை நாங்கள் சேர்க்க வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து முதல்வரிடமும் முன் வைத்துள்ளோம். ராமதாஸ் நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார். அவரது கருத்தில் அவர் நிலையாக நின்றால் சரி. சென்னை புலியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் குறித்த கேள்விக்கு, இது குறித்து முதல்வரிடத்தில் மனு அளித்துள்ளோம். ஐ.ஐ.டி வல்லுனர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது,அவர்களின் அறிக்கைக்கு பின்னர் எல்லாவற்றையும் சரி செய்து தான் அங்கு மக்களை அமர்த்துவார்கள்.

ஒப்பப்தாரார்கள் இது போன்று கட்டிடத்தை அலட்சியத்துடன் கட்டி உள்ளனர். அடிதட்டு மக்கள் என்பதாலே இவர்கள் இவ்வளவு மோசமாக கட்டி உள்ளனர். இனி அந்த ஒப்பப்தாரார்கள் எங்குமே பணி செய்ய கூடாது. அதே போல் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழியிறுத்துவோம். பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறோம். கொடநாடு வழக்கு தொடர்பான கேள்விக்கு, முன்னால் முதல்வரும், துனை முதல்வரும் ஏன் பதர வேண்டும்,அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அச்சப்பட தேவை இல்லை. இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு தருவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்கள் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 199

0

0