அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிப்பு – மாதவரத்தில் 1000 பேருக்கு இனிப்புகள் , பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

Author: Udayaraman
7 October 2020, 4:58 pm
Quick Share

திருவள்ளூர்: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையடுத்து மாதவரத்தில் 1000 பேருக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் அதிமுகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வருகின்ற 2021 – ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாதவரத்தில் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் , 1000 பேருக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இக்கொண்டாட்டத்தின் போது 2021 ம் ஆண்டிலும் அதிமுகவின் வெற்றியை சரித்திரம் சொல்லும் என்ற கோஷங்களை வெளியிட்டனர்.

Views: - 32

0

0