ரயிலில் கஞ்சா கடத்தி 3 பேர் கைது: 8 கிலோ கஞ்சா பறிமுதல்

12 July 2021, 1:51 pm
Quick Share

வேலூர்: காட்பாடி ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது, அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே காவல் துறையினருக்கு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்துவதாக இரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து அந்த ரயிலில் போலீசார் சோதனை செய்த போது ரயில் மூலம் கடத்தி சென்ற சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடத்தலில் ஈடுப்பட்ட கேரள மாநிலம் மணப்புரம் பகுதியை சேர்ந்த சாஜகான், முகமது அனீஷ் சபி, முபாரக் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 317

0

0