கஞ்சா போதையில் வாலிபரை அரிவாளால் தலையில் வெட்டிய 3 பேர் கைது
16 September 2020, 9:30 pmசென்னை: சென்னையில் கஞ்சா போதையில் வாலிபரை அரிவாளால் தலையில் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் மற்றும் பிரமோத் இவர்கள் இருவரும் வியாசர்பாடியில் உள்ள தனது நண்பரான சந்தோஷ் என்ற நபரை சந்திக்க நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் வந்த 3 பேர் சஞ்சயிடம் தகராறில் ஈடுபட்டு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சஞ்சய் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு சஞ்சயை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை மடக்கி சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியால் சந்தேகமடைந்த போலீசார் மேலும் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது வெட்டியது நாங்கள் தான் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் , வியாசர்பாடியை சேர்ந்த நரேஷ் குமார் (25) நவீன் குமார் ( 24) மற்றும் பவுல்சாத்ராக் (27) ஆகிய 3 கஞ்சா போதை ஆசாமிகளை எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.