வீடு கட்ட அடிக்கல் தோண்டும் போது மூன்று சாமி சிலைகள் மீட்பு

Author: kavin kumar
27 August 2021, 4:28 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீடு கட்ட அடிக்கல் தோண்டும் பணியின் போது பச்சை நிறக் கற்களால் ஆன பெருமாள், ஆண்டாள், அலமேலு உள்ளிட்ட மூன்று சாமி சிலைகள் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. மெக்கானிக் தொழில் செய்து வரும் இவர், புதிய வீடு கட்டும் பணிக்காக அடிக்கல் தோண்டும்போது பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் பீடத்துடன் சுமார் 2 அடி உயரமுள்ள பெருமாள், ஆண்டாள், அலமேலுமங்கை உள்ளிட்ட மூன்று பச்சை நிறசாமி கற்சிலைகள் இருந்ததை கண்டறிந்தனர். சிலை மீட்க்கப்பட்டது குறித்து தகவல் அறிந்துவந்த பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு,

கருவூலத்தில் கொண்டு சென்று சிலைகளை பாதுகாப்பாக வைத்தனர் பச்சை நிறத்தில் உள்ள சிலைகள் எக்காலத்தை சேர்ந்தது மரகத சிலையா என்பது குறித்தும் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், பொதுமக்கள் சிலை மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள பெருமாள் கோவிலில் மூன்று சிலைகளையும் வைத்து வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

Views: - 186

0

0