டாஸ்மாக் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

By: Udayachandran
3 October 2020, 5:23 pm
Tasmac Protest - updatenews360
Quick Share

திருப்பூர் : அரசு மதுபான கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக் கூடிய சூழ்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அருகே கோவிலில் உள்ள சூழ்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டது.

இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் கடையை அப்புறப்படுத்தக் கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று முருகம்பாளையம் பகுதியில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த ஒரு அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் . இதனையடுத்து வட்டாட்சியர் இரண்டு நாட்களில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டத்திற்கு திமுக , கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு கொடுத்திருந்தன.

Views: - 36

0

0