கோவை மாவட்ட வருவாய் அலுவலர் இடமாற்றம்..!

10 July 2021, 9:13 pm
Quick Share

கோவை: கோவை மாவட்ட வருவாய் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய வருவாய் அலுவலராக லீலா அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள 30 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்ட வருவாய் அலுவலரக இருந்த ராம துரைமுருகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் முதன்மை நிர்வாக அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். தொடர்ந்து, கோவை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக லீலா அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சட்ட அலுவலராக தற்போது பணியாற்றி வந்தார். ஒரு சில தினங்களில் லீலா அலெக்ஸ் கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பதவியேற்பார் என்று தெரிகிறது.

Views: - 106

0

0