கள்ளச் சந்தையில் ஆட்டோவில் வைத்து மது விற்பனை செய்த 2 பேர் கைது

2 March 2021, 9:40 pm
Quick Share

சென்னை: சென்னை கள்ளச் சந்தையில் , ஆட்டோவில் வைத்து மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, 300 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் , தலைமைச் செயலக போலீசார் ஓட்டேரி பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் வைத்து இருவர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 35 மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ரகு வயது 36 என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 336 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 5

0

0