விமான நிலையத்தில் ரூ1.2கோடி கடத்தல் தங்கத்துடன் 2 பேர் கைது

Author: kavin kumar
28 August 2021, 5:57 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ1.2 கோடி கடத்தல் தங்கத்துடன் 2 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை தொடர்ந்து கோவை, மதுரையில் ஆகிய இடங்களில் இருந்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையம் வந்தனர். விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் நோட்டமிட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 2 பயணிகள் நடந்து கொண்டதை தொடர்ந்து அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பரிடம் 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.5 கிலோ தங்கமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் ஆசனவாயில் மறைத்து 29.5 லட்சம் மதிப்பிலான 575 கிராம் தங்கமும் கடத்தி வந்தது தொிய வந்தது. அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் யாரேனும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்துள்ளனரா, தங்கம் யார் கொடுத்து அனுப்பியது என பல்வேறு கோணத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 190

0

0