புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுப்பட்ட 2 பேர் கைது…

Author: Udhayakumar Raman
29 November 2021, 5:10 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண மண்டபம், கடைகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஷட்டரை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்குட்பட்ட விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு கல்யான மண்டபம் அலுவலக கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டபட்டிருந்து. இதே போல் அதே பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இரண்டு கடைகளில் 10 ஆயிரம் ரூபாய் அளவிலான பணம் திருடபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கல்யான மண்டப மேலாளர் மற்றும் கடையின் உரிமையாளர்கள் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கையில் இரும்பு ராட் உடன் கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைஅடுத்து அந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்டது வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சிவா என தெரியவந்தது. இதனையடுத்து வில்லியனூர் புறவழிச்சாலையில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 211

0

0