அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு புள்ளி மான்கள் காயம்

28 March 2021, 2:29 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வடமதுரையில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு புள்ளி மான்கள் காயமடைந்தையடுத்து, வண்டலூர் வன விலங்கு பூங்காவிற்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரை சாலையில் வழிதவறி வந்த இரண்டு புள்ளி மான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சீத்தஞ்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் இரண்டு புள்ளி மான்களை மீட்டு சிகிச்சை அளிக்க பெரியபாளையம் கால்நடை மருத்துவர்கள் வரவைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி மேல்சிகிச்சைக்காக வண்டலூர் வனவிலங்கு பூங்காவிற்கு அழைத்து சென்றனர்.

Views: - 9

0

0