கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

10 November 2020, 7:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் மனவேலி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக அரியாங்குப்பம் போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் போலீசார் மனவேலி சுடலை வீதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும் படியாக அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ஜெனில் அகசி மற்றும் செல்வமனி என்றும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவர்களிடமிருந்து இருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்று போலிசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது அவர்கள் தங்களுக்கு தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த கார்த்தி @ பொய் கார்த்தி வில்லியனூரில் இருந்து தங்களுக்கு கஞ்சா வாங்கி வந்து கொடுத்ததாக ஒப்புகொண்டுள்ளனர். இதனை அடுத்து கைதான இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா வினியோகம் செய்து தலைமறைவாக உள்ள பொய் கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 15

0

0