குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

3 August 2020, 4:57 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் நான்கு மாதகாலமாக சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாம்மேடு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த நான்கு மாதகாலமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லையென்றும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த போது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டும் 10 நிமிடம் குடிநீர் வழங்கப்படுவதால் இதுகுறித்து உடனடி தீர்வு காணும் படி தெரிவித்தும்,

இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் ஆம்பூர் – வாணியம்பாடி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுப்பட்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு உடனடியாக தீர்வு எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்துச்சென்றனர்.
இதனால் இப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 8

0

0