நெல் முட்டைகளை கடத்தி வந்த லாரியை சிறை பிடித்த கிராம மக்கள்

22 January 2021, 7:58 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து நெல் முட்டைகளை கடத்தி வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணா வுர் ஊராட்சிக்கு உட்பட்ட பாமனி உள்ளிட்ட கிராமங்களில் 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது. தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடை செய்ய முடியாதா சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து பாமணி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு லாரி மூலம் நெல் மூட்டைகள் கடத்தப்படுவதாக கிராம மக்களுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து இன்று காலை பாமணி கிராமத்திற்கு செல்வதற்காக வெள்ளை நிற சாக்குகளில் நிரப்பப்பட்ட சுமார் 400 நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை கர்ணா வூர் கிராம மக்கள் வழிமறித்து சிறை பிடித்தனர். நேற்று இரவும் லாரி மூலம் இப்பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருட்டு தனமாக நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார்குடி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை மீட்டனர்.

டெல்டா பகுதியான மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சம்பா பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலைய ஊழியர்களின் துணையுடன் நடைபெறும் இத்தகைய திருட்டுக்களை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0