சுடுகாட்டு ஆக்கிரமிப்பை மீட்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் அமர்ந்து தர்ணா

19 October 2020, 8:51 pm
Quick Share

ஈரோடு: சுடுகாட்டு ஆக்கிரமிப்பை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளது அம்பேத்கர் நகர் . 120 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் , இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரவது இறந்தால் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சுடுகாடு அருகில் விவசாயம் செய்துவரும் பொன்னுசாமி என்ற நபர் தற்போது சுடுகாடு முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து சுற்றிலும் கம்பி வேலி போட்டு உள்ளதாக கூறி,

தங்கள் பகுதியில் யாராவது இறந்தால் தற்போது புதைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே சுடுகாட்டை மீட்டு தரக்கோரி அந்த பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினரின் சமாதான பேச்சுவார்த்தை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Views: - 19

0

0