ஆவின் பொருட்கள் உற்பத்தி நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு

27 August 2020, 8:20 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆவின் பொருட்கள் உற்பத்தி நிலையம் அமைய உள்ள இடத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையம் அருகே கூடுதலாக பால் பவுடர் நெய் மற்றும் லஸ்ஸி போன்ற பொருட்களை உருவாக்க 25 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ள பணிகள் துவங்குவதற்கு இடங்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் ஆவின் மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகள் புதிதாக பால் உற்பத்தி செய்யும் நிலையத்திற்கு 25 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளோம். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு தயார் செய்யப்படும் தயிர், மோர், நெய், லஸ்ஸி போன்ற பொருட்கள் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற பகுதிக்கு ஏற்றுமதி செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் ஆவின் நிர்வாகமுகம் செயல்படுத்தி வருகின்றோம்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் hi-tech பார்லர் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆவின் நிறுவனம் உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. சுகாதாரம் மற்றும் தரத்திலும் சிறந்து விளங்குகின்றது. பால் உற்பத்தி விவசாயிகளுக்கு பால் பாக்கி 3 கோடி ரூபாய் இன்று முதல் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தற்போது அமையவுள்ள இந்த பால் உற்பத்தி மையத்தில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடுத்தபடியாக மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 12 வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆவின் பால் விற்பனை குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் மற்ற மாவட்டங்களில் விற்பனையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பால் பொருட்கள் தங்கு தடையில்லாமல் தற்போது கிடைத்து வருகிறது. ஆவின்துறை லாபத்தை நோக்கி செல்ல கூடியது அல்ல மக்களை சந்தோஷப்படுத்தும் துறையாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஆவின் பொருட்கள் விற்பனை நிலையங்கள் அதிக அளவில் அமைக்க உள்ளோம் இன்னும் ஒரு மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் எதிர்பாராத திருப்புமுனை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.