தங்க நகைக்கு ஆசைப்பட்டு இளம்பெண் கொலை… விசாரணையில் அவிழ்ந்த முடிச்சுகள்!

10 August 2020, 8:42 pm
Quick Share

விருதுநகர்: திருத்தங்கலில் ஒன்றரை பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த பட்டாசு தொழிலாளி மற்றும் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள பெரியார் காலனியை சேர்ந்த செல்வ மணிகண்டன். இவர் திருத்தங்கல் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருத்தங்கலில் உள்ள ஒரு பட்டாசு கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பிஏ பட்டதாரியான பிரகதி மோனிகா (24) என்பவருக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகளாக செல்வமணிகண்டனும், பிரகதி மோனிகாவும் கழுத்தில் தங்க நகைகள் அணிந்து வலம் வந்த நிலையில்,

இதைக்கண்ட எதிர்வீட்டில் வசிக்கும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் கோடீஸ்வரன் (20) என்பவருக்கு பிரகதி மோனிகா அணிந்திருந்த தங்க நகை மீது ஆசை ஏற்பட்டள்ளது. அதனை கொள்ளையடிக்க திட்டமிட்ட கோடீஸ்வரன் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரும் நண்பருமான டைசன் சேகர் (20) என்பவரின் உதவியை நாடினார். இவர்கள் இருவரும் கடந்த எட்டாம் தேதி வீட்டில் யாரும் இல்லாமல் தனியே இருந்த பிரகதி மோனிகா கழுத்தில் மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தாலிச் செயினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது கூட ஒன்றும் தெரியாதது போல் மக்கள் கூட்டத்தில் இருந்துள்ளனர். வீட்டிலிருந்த மற்ற தங்கநகைகள் மற்றும் உள்ள பொருள்கள் திருடப்படாத நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, எதிர் வீட்டில் இருந்தவர்கள் மட்டும் முன்னுக்குப் பின்னாக தகவல் தெரிவிக்கவே சந்தேகமடைந்த காவல்துறையினர் கோடீஸ்வரணை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து மேல் விசாரணை நடத்தியதில்,

தனது நண்பர் டைசன் சேகர் உதவியோடு கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஒரு பவுன் தங்கச்சங்கிலி தன்னுடைய வீட்டில் இருப்பதாகவும், அரை பவுன் தாலி டாலர் டைசன் சேகரிடம் இருப்பதாகவும், போலீசாரிடம் கோடீஸ்வரன் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து டைசன் சேகரை கைது செய்தனர். திருமண நடந்து ஒன்றரை மாதத்தில் ஒன்றரை பவுன் நகைக்காக இளம்பெண் கொலை செய்யப்பட்டது சிவகாசி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 43

0

0