முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியரின் மனைவி…

11 August 2020, 10:38 pm
Quick Share

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் புதிய முதுநிலை காவல் கண்காணிப்பாளராக மாவட்ட ஆட்சியரின் மனைவி நிஹரிகாபட் பொறுப்பேற்றுக்கொண்டார்.

காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மகேஷ்குமார் பர்ன்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து காரைக்காலில் புதிய மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹரிகாபட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் .இன்று நண்பகல் 12 .35 மணி அளவில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் ASP ஆகவும் சண்டிகரில் Asp மற்றும் SPஆகவும் இவர் பணியாற்றியிருக்கிறார் . அதே சண்டிகரில் விஜிலென்ஸ் Sp ஆகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

பாண்டிச்சேரியில் போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளராகவும், IRBN – Commendent ஆகவும் பணிபுரிந்த நிஹரிகாபட் தற்போது காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் .இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎஸ் Batch ல் உள்ளவர். நிஹரிகாபட் IPS, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ஷர்மா IAS – ன் மனைவி ஆவார். ஒரே மாவட்டத்தில் கணவர் மாவட்ட ஆட்சியராகவும், மனைவி முதுநிலை காவல் கண்காணிப்பாளராகவும் உயர் பதவிகளில் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.