இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வர இளம் சுயேட்சை வேட்பாளர் வேண்டுகோள்

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2021, 3:42 pm
Quick Share

கோவை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என கோவை தெற்கு தொகுதி இளம் சுயேட்சை வேட்பாளர் கேட்டு கொண்டுள்ளார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.25 வயதான இவர்,தமிழகத்தில் முக்கிய தொகுதியாக ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. போட்டியிடுவது, மக்கள் நீதி மய்யம் சார்பாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கமலஹாசன், போட்டியிடுவது என போட்டிகள் கடுமையாக உள்ள சூழலில் சுயேட்சை வேட்பாளராக களம் காண உள்ள செல்வகுமார் கூறுகையில்,

கடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், குறிப்பாக வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இளைஞர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என கூறினார். கொரோனா தற்போது அதிகம் பரவி வருவதால், சமூக வலைதளங்களில் தாம் அதிக அளவில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் வயது குறைந்த இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 50

0

0