13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

12 January 2021, 5:46 pm
Quick Share

கோவை: கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது பக்கத்து விட்டில் குடியிருக்கும் 26 வயது இளைஞரும் இளைஞரின் நண்பர் ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமியை அப்பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறுமி அந்த இரு இளைஞர்களிடமிருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி அவரது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் கோவை ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் 26 வயது இளைஞரை கைது செய்த நிலையில் மற்றொருவர் தலைமறைவானார். தலைமறைவாகிய அந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Views: - 3

0

0