தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர் கைது: இருசக்கர வாகனங்கள் பறிமுதல்…

Author: Udhayakumar Raman
8 September 2021, 4:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் உத்தரவின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் எல்லைமாரியம்மன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து வாகனத்தில் ஆவனங்கள் கேட்டபோது அவர் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறி போலிசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார், இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலிசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்,

விசாரணையில் அவர் மரக்காணம் ஆலத்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் திலிப் என்கிற ஆனந்த் என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு இருசக்கர வாகனம் என்றும் தெரியவந்தது, மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் அவர் பதுக்கி வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதனை தொடர்ந்து அவர் மீது திருட்டு வழக்கு பதிந்த போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட திலிப் மீது தமிழக பகுதியான மரக்காணத்தில் ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 293

0

0