ரோந்து காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது: போலீசார் தீவிர விசாரணை

18 June 2021, 3:58 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே அருகே ரோந்து காவலரை தாக்கிய இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள வடுவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முரளி,காவலர் குமார் இருவரும் இரவு ரோந்து வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது கட்டக்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நான்கு வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது வாலிபரகள் நிற்காமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த ரோந்து போலீசார் இருவரும் வாலிபர்களை பின்தொடர்ந்து சென்று பிடித்து விசாரித்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவலர் முரளியை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற தப்பிச்சென்றனர.

தாக்கப்பட்ட காவலர் முரளி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரில் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் நான்குபேர் யும் தேடி வந்தனர். சி.சி.டி..வி. கேமரா காட்சிகள் மூலம் குற்றவாலிகள் அடையாளம் காணப்பட்டு தனிப்படை போலீசார் சிநேகிதன்,மணிமுகுந்தன்,வெங்கடேஷ்,ஆகாஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் காவலர்களை தாக்குவது, காவல்துறைக்கு எதிரான அத்துமீறலில் ஈடுபடுவது, மாவட்ட காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

Views: - 154

0

0