சிறுவர்களுக்கான பட்டாசுகள் அதிக அளவில் விற்பனை.. தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம்..

28 October 2020, 1:06 pm
Quick Share

கொரோனா கால தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சிறுவர்களுக்கான பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், பட்டாசுகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என கோவையை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி இன்னும் சில நாட்களில் வரும் நிலையில் இந்த வருட தீபாவளி பட்டாசு விற்பனை சிறுவர்களை கவரும் விதமான பட்டாசுகள் அதிகம் அளவில் விற்பனை நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கோவையை சேர்ந்த பிரபல பட்டாசு விற்பனையாளர் கூறியுள்ளார்.

ஆண்டு முழுவதும் பட்டாசு விற்பனை செய்ய தேசிய அளவிலான பெசோ உரிமம் பெற்றுள்ள கோவையை சேர்ந்த பட்டாசு விற்பனையாளரான உமாபதி இந்த வருட பட்டாசு விற்பனை குறித்து கூறுகையில், இந்த வருடம் பட்டாசு விலையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும்,கொரோனா கால ஊரடங்கால் இந்த ஆண்டு முழுவதும் எந்த வித பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில் தீபாவளி பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்து இருப்பதாகவும், இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி வருவதாக கூறினார்.

இந்த வருடம் பட்டாசு தயாரிப்புகளில் இளம் வயது சிறுவர்களை கவரும் விதமான சிறிய வகையிலான வெடி மற்றும் ட்ரோன் வகை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பட்டாசுகள் வாங்கும் போது கவர்ச்சி கரமான தள்ளுபடி விளம்பரங்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் தற்போது சில இடங்களில் விற்பனை செய்யபட்டு வருவதாகவும் இதனை அரசு உரிய முறையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

Views: - 21

0

0

1 thought on “சிறுவர்களுக்கான பட்டாசுகள் அதிக அளவில் விற்பனை.. தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம்..

Comments are closed.