உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி : குண்டுகள் முழங்க வீரவணக்கம்!!

21 October 2020, 4:20 pm
Police Tribute - Updatenews360
Quick Share

திருப்பூர் : காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. குண்டுகள் முழங்க உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட காவல் துறையால், அக்டோபர் 21 -ம் நாளான இன்று காவலர் வீரவணக்க நாளில், கடந்த 01.09.2019 முதல் 31.08.2020 வரை பணியின் போது இயற்கைக்கு மாறாக மரணம் மற்றும் உயிர் தியாகம் செய்த 264 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நினைவு கூறும் வகையில் வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகரில் நடைபெற்ற வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திருநதி. திஷாமிட்டல், திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் உதவி ஆணையர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பணியின்போது இயற்கைக்கு மாறாக மரணம் மற்றும் உயிர் தியாகம் செய்த 264 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நினைவு கூறும் வகையில், மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செய்து, மாநகர ஆயுதப்படையினர் குண்டுகள் முழங்க மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Views: - 19

0

0