முன்னாள் காதலியை ‘தனிமைப்படுத்தி’ பழிவாங்கியவர்.. இப்போ ‘மாமியார்’ வீட்டில்..!

16 January 2021, 12:32 pm
Quick Share

இஸ்ரேலில், சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் ஒருவர், தனது முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கத்தில், அவருக்கு 4 முறை கொரோனாவுக்கு தனிமைபடுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரம் வெளியே வர, தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர், சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கடந்து ஆண்டு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, மனிதர்களை வீட்டிற்குள் முடக்கிய பெருமை கொரோனாவுக்கு உண்டு. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், கொரோனாவின் ஆரம்ப காலம் முதல், மாஸ்க் அணிவதும், விலகி இருப்பதும், அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தி கொள்வதும் வைரஸை கட்டுப்படுத்தும் சிறந்த வழிகளாக இருந்தன.

இந்நிலையில், இஸ்ரேலில் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் ஊழியராக பணியாற்றும் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் 35 வயது நிரம்பிய தனது முன்னாள் காதலிக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 4 முறை தனிமைப்படுத்தி கொள்ளும்படி, சுகாதாரத்துறை சார்பாக, அப்பெண்ணின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்.

முதல் முறை சுகாதாரத்துறையிலிருந்து தகவல் கிடைத்ததும், அப்பெண் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வீட்டில் இருந்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து சுகாதாரத்துறையிலிருந்து 4 முறை அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், ஏன் இவ்வாறு நடக்கிறது என குழம்பிப் போன அந்த பெண், இதுகுறித்து புகார் அளிக்க, வசமாக சிக்கினார் அவரது முன்னாள் காதலர்.

இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிந்து வரும் அந்த நபர், காதலியை பழவாங்க இவ்வாறு நடந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, தனியுரிமை மீறல் உள்ளிட்ட பல வழக்குகளில் அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்தனர். இது தேவைதானா..!

Views: - 0

0

0