ஒரு கப் அவல் போதும்…. சுட சுட அவல் வடை ரெடி!!!

28 September 2020, 9:30 am
Quick Share

வீட்டில் அவல் இருந்தால் போதும் அசத்தலான மொறு மொறு அவல் வடை தயார். இதனை குறைவான நேரத்தில் செய்து முடித்து விடலாம். இன்று தேநீர் குடிக்கும் போது இந்த அவல் வடையை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இப்போது இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

அவல்- 1 கப்

பெரிய வெங்காயம்- 1

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- ஒரு துண்டு

கடலை மாவு- 2 தேக்கரண்டி

அரிசி மாவு- 2 தேக்கரண்டி

சீரகம்- ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை- 2 கொத்து

கொத்தமல்லி தழை- ஒரு கையளவு

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

அவல் வடையை செய்வதற்கு முதலில் ஒரு கப் அவலை பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளுங்கள். ஊற வைத்த அவலில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்து விடலாம். பிழிந்து எடுத்த அவலை ஒரு தனி கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளலாம். 

இதனோடு இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம், நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை, ஒரு கையளவு கொத்தமல்லி தழை, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வையுங்கள். எண்ணெய் மிதமான சூட்டை விட கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். கலந்து வைத்த மாவை வடையாக தட்டி எண்ணெயில் போடவும். வடை பொன்னிறமாக மாறியதும் சூடாக பரிமாறவும்.

Views: - 13

0

0