உங்க வீட்ல ஜவ்வரிசி இருக்கா…. அப்போ இன்னைக்கே இந்த தோசை டிரை பண்ணி பாருங்க!!!

28 January 2021, 12:35 pm
Quick Share

தோசையில் பல வகைகள் உண்டு. கோதுமை தோசை, அரிசி மாவு தோசை, மசால் தோசை, ரவை தோசை, நெய் ரோஸ்ட் என அடுக்கிக் கொண்டே போகலாம்.  இன்று நாம் பார்க்க இருப்பது ஜவ்வரிசி தோசை. ஜவ்வரிசி வைத்து இதுவரை பாயாசம் தான் செய்திருப்பீர்கள். இந்த வித்தியாசமான தோசை ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- ஒரு கப்

உளுத்தம்பருப்பு- 1/2 கப்

துவரம் பருப்பு- 2 தேக்கரண்டி

வெந்தயம்- 1 தேக்கரண்டி

ஜவ்வரிசி- 1/2 கப்

கல்லுப்பு- ஒரு தேக்கரண்டி 

தண்ணீர்

செய்முறை:

*ஒரு அகலமான பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு  தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

*அதே போல ஜவ்வரிசியையும் மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். 

*பொருட்கள் அனைத்தும் ஊறிய பின் அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். 

*இந்த மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

*தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும். கல் சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவு ஊற்றி ஒரு மூடி போட்டு நான்கு நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்கவும். 

*இதற்கு சுற்றிலும்  எண்ணெய் ஊற்ற தேவையில்லை. 

*தோசை வெந்ததும் எடுத்து விடலாம். அவ்வளவு தான்… ருசியான மெது மெது ஜவ்வரிசி தோசை தயார்.

Views: - 61

0

0