செம டேஸ்டான முட்டை பெப்பர் மசாலா… ஈசியாக செய்து விடலாம்!!!

21 November 2020, 11:12 am
Quick Share

முட்டை இருந்தால் போதும், அதை வைத்து அன்றைய சமையலையே முடித்து விடலாம். குழம்பு, பொரியல், வறுவல் என முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை தயாரிக்கலாம். இன்று முட்டை பெப்பர் மசாலா எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

முட்டை- 6

தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி

தக்காளி- 1

வெங்காயம்- 3

பச்சை மிளகாய்- 4

கறிவேப்பிலை- ஒரு கொத்து

மிளகுத்தூள்- 3 தேக்கரண்டி

சீரகத்தூள்- ஒரு தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

முட்டை பெப்பர் மசாலா செய்வதற்கு முதலில் முட்டைகளை வேக வைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை கிளறவும். 

இப்போது நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகத்தூள், இரண்டு தேக்கரண்டி  மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தண்ணீர் கொதிக்கும் போது கறிவேப்பிலை போட்டு கொள்ளவும். 

தண்ணீர் நன்றாக கொதித்து ஒரு கிரேவி பதம் கிடைத்த பிறகு மேலும் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும். இந்த சமயத்தில் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி சேர்த்து கொள்ளலாம். இப்போது இரண்டு நிமிடங்கள் பொறுமையாக கிளறி கடைசியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 28

0

0