குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ருசியான பருப்பு சப்பாத்தி…!!!

7 April 2021, 9:49 am
Chappathi - Updatenews360
Quick Share

அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சப்பாத்தியும் ஒன்று. ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக சப்பாத்தி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்தால் தான் போர் அடிக்காமல் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது பருப்பு சப்பாத்தி ரெசிபி. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப் துவரம் பருப்பு – 1/4 கப் சீரகம் – 1/2 கரண்டி  நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு 

கரம் மசாலா – 1/2 கரண்டி மஞ்சள்தூள் – 1/4 கரண்டி நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு 

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பருப்பு சப்பாத்தி செய்வதற்கு முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி ஒரு குக்கரில் சேர்க்கவும். இதனோடு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர், மஞ்சள் தூள், சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று விசில் வரவிட்டு இறக்கவும். 

வேக வைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மத்து வைத்து கடைந்து வையுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்து வைத்த பருப்பு, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி தழை, ஒரு கரண்டி நெய் ஆகியவை சேர்த்து கலக்கவும். 

மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும். மாவை நன்கு பிசைந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும். இதனை தோசைக்கல்லில் போட்டு வெண்ணெய் அல்லது நெய் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான்… சுவையான பருப்பு சப்பாத்தி ரெடி.

Views: - 0

0

0